Lioncomics

article by lucky luke

Home | cinebooks | About Me | Lion Comics | history | Muthu Comics | history | Comics Classics | History | The Rest | Tiger | luckyluke | Tex Willer | XIII | Iznogoud | Bruno brazil | Modesty Blaise | Phantom | mandrake | Prince | Robot Archie | The Spider | Ric Hochet | chick Bill | Specials of the Month | Available Books | Compare | fans around the world | Links | article by lucky luke | Martin Mystère | Secret Agent X-9 | Buz Sawyer | Flash Gordon | Cisco Kid | Judge Dredd | Bat Man | Steel Claw | James Bond | Diabolik | sexton blake | Heroes not yet appeared in lion | Discussion Forum | Barracuda | Guest Book | Comics till date by L&M | Comics Blogs

காமிக்ஸ் சிர்ளுக்கு!

Thanks to luckyluke for allowing me to repost this article here.
If you go to http://madippakkam.blogspot.com you can find many articles in different topics.

நண்பர் இளவஞ்சி என்னுடைய பதிவொன்றில் தன்னுடைய காமிக்ஸ் ரசிப்புத் தன்மையை வெளிப்படுத்தியிருந்தார்....

நானும் ஒரு காமிக்ஸ் ரசிகன் என்ற முறையில் இது குறித்து ஒரு பதிவொன்று போடலாம் என்று முடிவு செய்தேன்....

தமிழில் காமிக்ஸ் என்பது 1960களில் வெளிவர ஆரம்பித்தது... எனக்குத் தெரிந்து "மாலை மதி" முதலில் காமிக்சாக 1960களின் மத்தியில் வந்தது.... அமெரிக்க மற்றும் ஐரோப்பிய காமிக்ஸ்களின் உரிமையை வாங்கி தமிழில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டார்கள்....

ஆனாலும் தமிழ் காமிக்ஸின் பொற்காலம் ஆரம்பமானது முத்து காமிக்ஸ் தோன்றிய பிறகே.... 1971ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட முத்து காமிக்ஸின் முதல் கதை இரும்புக்கை மாயாவி.... 128 பக்கங்கள் கொண்ட அந்தப் புத்தகத்தின் விலை அப்போதே 90 காசு.... முல்லை தங்கராசன் என்பவரை பொறுப்பாசிரியராக கொண்டு முத்து காமிக்ஸ் ராஜநடை போடத் தொடங்கியது....

பெரும் வரவேற்பின் காரணமாக முத்து காமிக்ஸ் 80களின் ஆரம்பத்தில் முத்து காமிக்ஸ் வாரமலர் (தினமலர் வாரமலருக்கே அது தான் முன்னோடி) என்ற ஒரு இதழைத் தொடங்கியது.... ஆனாலும் மாத இதழுக்கு கிடைத்த வரவேற்பு வார இதழுக்கு கிடைக்காததால் அது கொஞ்சம் ஆண்டுகளிலேயே நிறுத்தப் பட்டு விட்டது....

முத்து காமிக்ஸின் அபார வெற்றியைத் தொடர்ந்து அதே நிறுவனத்தார் 1984ஆம் ஆண்டு லயன் காமிக்ஸ் என்ற புதிய காமிக்ஸ் இதழையும் தொடங்கினார்கள்.... முத்து காமிக்ஸின் உரிமையாளர் தன் மகனுக்காக தொடங்கிய காமிக்ஸ் அது.... அவரது மகன் விஜயன் லயன் காமிக்ஸின் ஆசிரியராக பொறுப்பேற்ற போது அவரது வயது 17.

இதே ஆண்டில் பிரபல தினத்தந்தி குழுமமும் காமிக்சுகளுக்கு இருக்கும் ஆர்வத்தைப் பார்த்து தானும் ராணி காமிக்ஸ் தொடங்கியது.... 1984 முதல் சுமார் பத்து ஆண்டுகளுக்கு காமிக்ஸ் விற்பனை தமிழ்நாட்டில் கொடிகட்டி பறக்க ஆரம்பித்தது.... குறிப்பாக Cowboy கதைகளை தமிழக குழந்தைகளும், இளைஞர்களும் பரவலாக ரசிக்க ஆரம்பித்தார்கள்....

லயன் காமிக்சும் தன் சாம்ராஜ்யத்தை ஜூனியர் லயன், மினி லயன், திகில் காமிக்ஸ் என்று புதுப் புது காமிக்ஸ்களைத் தொடங்கி விரிக்க ஆரம்பித்தது....

இந்தக் காலக்கட்டத்தில் குழந்தைப் பருவத்தில் இருந்த நானும் காமிக்ஸுகளுக்கு அடிமை ஆனேன்... அதுவும் லயன் காமிக்ஸ் தீபாவளி, கோடை விடுமுறை, பொங்கல் ஆகிய சமயங்களில் Digest போன்று ஸ்பெஷல் இதழ் வெளியிடுவார்கள்... அவற்றைப் படிக்க பெரும் ஆர்வம் காட்டுவேன்... 1987ஆம் ஆண்டு லயன் காமிக்ஸ் தீபாவளி மலராக வெளியிட்ட சூப்பர் ஸ்பெஷல் 10 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்றது.... சமீபத்தில் அந்த இதழ் ஒன்றினை ரூ. 500 பிரீமியம் செலுத்தி வாங்கினேன்....

என் காலக்கட்டத்தில் காமிக்ஸ் படித்த சிலர் இன்னமும் காமிக்ஸ் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள் (நானும் தான்) .... நிறைய பேர் படித்த காமிக்ஸ்களை கலெக்டு செய்தும் வைத்திருக்கிறார்கள்.... நான் கிட்டத்தட்ட 85 சதம் லயன் காமிக்ஸ் வைத்திருக்கிறேன்....

1993-94களில் தனியார் தொலைக்காட்சிகள் வந்தபிறகு குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் காமிக்ஸ் மோகம் குறைய ஆரம்பித்தது.... ராணி காமிக்ஸ் தாக்குப் பிடிக்க முடியாமல் 500 இதழ்களோடு தன் கணக்கை முடித்துக் கொண்டது.... மினி லயன், ஜூனியர் லயன், திகில் இதழ்களும் ஊத்தி மூடிக்கொண்டன....

இப்போதும் மிஞ்சி நிற்பது முத்து மற்றும் லயன் காமிக்ஸ்கள் மட்டுமே.... இந்த கோடை விடுமுறைக்கு லயன் காமிக்ஸ் வெளியிட்டிருக்கும் இதழின் விலை என்ன தெரியுமா? ரூபாய். 100/-.... என்னைப் போன்ற ஒரு சிலர் அதையும் வாங்கிக் கொண்டு தான் இருக்கிறோம்....

யாராவது Ex-காமிக்ஸ் ரசிகர்கள் இருந்தால் சொல்லுங்கள்.... மீண்டும் நீங்கள் காமிக்ஸ் படிக்க நான் உதவுகிறேன்... காமிக்ஸ் படிப்பதால் ஒரு பெரிய நன்மை என்னவென்றால் நம் வயது 20 வருடம் குறைந்தது போல உணருகிறோம்....

அறிவியலால் கண்டுபிடிக்க முடியாத கால இயந்திரந்தின் பயனை காமிக்ஸ் படிப்பது மூலம் நாம் அடையலாம்.....

26 Comments:

rajanadar said...

Hi Lucky..!!

I think we share some common intrests - like DMK, Kalaingar and now comics... I am beeing your viewer for last two months and never thought of posting a comment..and now after seeing this post I decided..

Me too a fanatic fan of muthu and lion.... and now living in delhi...
Can you give me some info on how to subscribe these magazines on yearly basis?
you can contact me on my mail id rajavanaj@yahoo.com

with regards

Raja

11:23 AM  
arunmoli said...

அண்ணாத்தே,

இரும்புக்கை மாயாவியோட ஜானி, மாண்ட்ரேக், ஜூடோ டேவிட், லாரன்ஸ் .... அடாடா அது ஒரு காலமப்பா.

11:35 AM  
பட்டணத்து ராசா said...

நானும் காமிக்ஸ் ரசிகன், லக்கி லுக்கு, ஆர்ச்சி இப்படி ரொம்ப ஆழமானது நம்ம காமிக்ஸ் வாசிப்பு :-)

11:37 AM  
Sridharan said...

ம‌ல‌ர்ரும் நினைவுகள்..உன்க‌லுட‌ய‌ நினைவுக்க‌ள் என்னுடைய‌ சின்ன‌ வய‌து நினைவுக்கு ஈட்டு சென்ட்ர‌து..Thank u very much...Comics is a wonderful experience to improve our creativity and கற்ப‌னை திறன்...I m ready to join ur comic clup....

11:50 AM  
சர்தார் said...

பாலகுமாரனும், சுஜாதாவும் மட்டுமே சுவாரஸ்யமான விஷயத்தைத் தர்றவங்கன்னு யார் சொன்னா? (உங்கள் title Description ஐத் தானய்யா சொல்றேன்.)

இப்பதிவின் மூலம், காமிக்ஸ் புத்தகங்களைக் கடையிலிருந்து சுடச்சுட வாங்கி மூச்சிறைக்க ஓடிவந்து கட்டிலின் மேலே விழுந்து ஒரே மூச்சில் படித்து முடித்த அந்த நாள் ஞாபகத்தை கண்முன்னே கொண்டு வந்துவிட்டீர்கள்.

11:52 AM  
நாமக்கல் சிபி @15516963 said...

நானும் காமிக்ஸ் ரசிகன் தானுங்க!

லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ், ராணி காமிக்ஸ் போன்றவற்றை சிறு வயதில் படிப்பேன். ஆனா கலெக்ஷனெல்லாம் கிடையாது. ராணி காமிக்ஸில் ஒவ்வொரு இதழிலும் ஒரு வாசகர் கடிதம்/கட்டுரை ஒரு பக்க அளவில் வேறு வெளியிடுவார்கள். நானும் பல முறை அனுப்பியிருக்கிறேன். (பிரசுரமானதில்லை என்பது வேறு விஷயம்)

ஜேம்ச் பாண்ட்(ராணி காமிக்ஸ்)இரும்புக்கை மாயாவி, இரும்பு மனிதன் ஆர்ச்சி, அ.க.கொ.கழகம்( அழித்தல், கடத்தல்,கொள்ளை) போன்ற கதைகள் மிகவும் விரும்பிப் படித்தவை.

12:35 PM  
D The Dreamer said...

நானும் ஒரு காமிக்ஸ் விசிறி தான்.

இந்திரஜால் என்று ஒரு காமிக்ஸ் கலர் படங்களுடன் வந்து அசத்தியதாக ஞாபகம். இல்லீங்களா??

12:37 PM  
luckylook said...

பின்னூட்டம் இட்ட காமிக்ஸ் ரசிகர்களுக்கு நன்றி!

////Can you give me some info on how to subscribe these magazines on yearly basis?///

Rajanadar you contact Lion comics office through their E-mail.... their e-mail ID is : lion@vsnl.com

////அ.க.கொ.கழகம்( அழித்தல், கடத்தல்,கொள்ளை)///

அது அ.க.கொ. அல்ல அ.கொ.தீ.க. (அழிவு, கொள்ளை, தீமை கழகம்)

////இந்திரஜால் என்று ஒரு காமிக்ஸ் கலர் படங்களுடன் வந்து அசத்தியதாக ஞாபகம்.///

இந்திரஜால் பற்றி குறிப்பிட மறந்து விட்டேன்.... இந்திரஜாலில் 90 சதம் மாயாவி (முகமூடி) கதைகளே வரும்.... மீதி கதைகளும் ரிப் கெர்பி போன்ற ஹீரோக்களுடையதே....

12:46 PM  
வவ்வால் said...

ஸ்பைடர் மேன்,மாடஸ்டி பிளைசி, போன்றவர்களும் வந்து கலக்குவாங்களே அத எல்லாம் விட்டுடிங்க,அப்புறம் ஒரு கெளபாய் வருவார் கில்லர் டேவிட் நு அது ஒரு கனா காலம்.அவங்க எல்லாம் நிஜமா எங்காவது இருப்பாங்கனு நினைத்ததுலாம் உண்டு! லக்கி லுக் பில்லி நு ஒரு பொடி பயன் தாதாவா இருப்பான் அவன் கூட தான் கதைல சன்டை போடுவார் :-))

12:54 PM  
மாயவரத்தான்... said...

//மீண்டும் நீங்கள் காமிக்ஸ் படிக்க நான் உதவுகிறேன்... //

எப்பிடி?!

காமிக்ஸ் குறித்த என்னுடைய பழைய (1 வருஷத்துக்கு முந்தைய) பதிவு இதோ...http://mayavarathaan.blogspot.com/2005/03/blog-post_14.html

அப்போவே இந்தப் பதிவுக்கு நூத்துக்கணக்கிலே பின்னூட்டம் வந்திச்சு. ஆனா நான் டெம்ப்ளேட் மாத்தும் போது ஏற்பட்ட ஒரு குழப்பத்திலே இதையும் சேர்த்து பழைய பதிவுகள் அத்தனையிலயும் பின்னூட்டங்கள் காலி!

12:57 PM  
மாயவரத்தான்... said...

லக்கிலுக்... உங்களோட இப்போதைய புகைப்படம் என்னுடைய மேற்படி பதிவில் போட்டிருக்கிற 'லயன் ஜாலி ஸ்பெஷலில்' சுட்டது தானே?!

12:57 PM  
ப்ரியன் said...

அது ஒரு அழகியா கனாகாலம் பழசை நியாபகப் படுத்திடீங்க லக்கி லுக்...

கிராமமான எங்கள் ஊருக்கு வரும் பேப்பர்காரனுக்கு காத்திருந்து பிள்ளைகள் எல்லோரும் மாற்றி மாற்றி படித்தது அது ஒரு அழகிய நிலா காலம்

1:15 PM  
(துபாய்) ராஜா said...

மறந்த மழலை நினைவுகளை மலர
வைத்து மனதை மகிழ்ச்சி கொள்ள வைத்துவிட்டீர்கள்.

1:16 PM  
செந்தழல் ரவி said...

வாங்க லக்கி...உங்களிடமிருந்து இப்படி ஒரு பதிவைத்தான் நீண்ட நாள் எதிர்பார்த்தேன்...

சிக்பில் / மதியில்லா மந்திரி / சூப்பர்ஹிட் இரத்த படலம் எல்லாம் விட்டுவிட்டீரே...

சின்ன வயதில் என் பள்ளிக்காலம் உள்விடுதிகளில் கழிந்தது...

மே மாதம் லீவ் மட்டும்தான்..அப்போதெல்லாம் எங்க பெரியப்பா பையன் கிட்ட வாங்கி படிப்பேன்...அதுக்காகவே அவங்க வீட்டுக்கெல்லாம் போவேன்...

இப்போது சென்ற மாதம் சில புத்தகங்கள் வாங்கினேன்...

மேலும் கொன்சம் மனியார்டர் அனுப்பிட்டு, புத்தகங்களுக்காக காத்திருக்கேன்...

என் அட்ரஸ் சொல்லுறேன்...புக் எல்லாம் கொரியர் பன்னிடுங்க...

1:42 PM  
சீனு said...

//இரும்புக்கை மாயாவியோட ஜானி, மாண்ட்ரேக், ஜூடோ டேவிட், லாரன்ஸ் .... அடாடா அது ஒரு காலமப்பா.
//
அட! ஆமாமப்பு!! நானெல்லாம் 'இரும்புக் கை' மாயாவி ரசிகனாக்கும். அதுவும் மாயவிக்கு ஆபத்து வரும்பொழுதெல்லாம் இதயம் திக் திக் என்று அடிக்கும்.

2:28 PM  
luckylook said...

/// லக்கிலுக்... உங்களோட இப்போதைய புகைப்படம் என்னுடைய மேற்படி பதிவில் போட்டிருக்கிற 'லயன் ஜாலி ஸ்பெஷலில்' சுட்டது தானே?! ////

மாயவரத்தான் உங்கள் மேற்படி பதிவுக்கு போய் பாருங்க... படமே இல்லை... ஆமாம்.... Lioncomics.com வெப்சைட் ஒருவாரமாக இல்லை.... அவர்கள் Renewal செய்ய மறந்து விட்டார்கள் போல....


////எப்பிடி?!///

காமிக்ஸ் நண்பர்கள் எல்லாம் ஒரு Gang ஆக இருக்கிறோம்.... எங்கள் Gang அப்பப்போ சிவகாசி போய் லயன் ஆசிரியரை கூட சந்தித்து வருவதுண்டு.... காமிக்ஸ் படிக்கும் ஆர்வம் இன்னமும் இருப்பவர்கள் எங்கள் Gangல் சேரலாம்....

காமிக்ஸ் நண்பர்களுக்கு இன்னொரு மகிழ்ச்சியான செய்தி... இப்போது லயன் காமிக்ஸ் ரூ. 100/- விலையில் 15 நாட்களுக்கு முன்பு "ஜாலி ஸ்பெஷல்" வெளியிட்டிருக்கிறார்கள்.... கடையில் கிடைக்கிறது... இலவச இணைப்பாக லக்கிலுக்கின் சாகசமான "தாயில்லாமல் டால்டனில்லை" செம கலக்கலாக இருக்கிறது.... உடனே வாங்கிப் படித்து மகிழுங்கள்....

3:12 PM  
யாத்திரீகன் said...

ராணிமுத்து காமிக்ஸ் என்றும் வந்தது அல்லவா.. அதில் வரும் மாயாவி (Phantom) கதைக்கு அப்பொழுது நான் மயங்கியே கிடந்தேன் :-))

மேலும் பூந்தளிரை விட்டு விட்டீர்கள்.. ,

அப்புறம்... கார்ட்டூன் இல்லாவிடினும்.. குழந்தைகளுக்கான கதைகள் எழுதுவதில் வாண்டுமாமா இருந்த இடத்தை யாருமே இன்னும் பிடிக்கவில்லை என்பது சந்தோஷமான வருத்தமான விஷயம்...

3:18 PM  
பரஞ்சோதி said...

லக்கிலுக் சார்,

சிறுவர் பூங்கா குழந்தைகள் எல்லாம் என்கிட்ட வந்து மாமா, மாமா, நம்ம லக்கிலுக் மாமா நிறைய காமிக்ஸ் புத்தகங்கள் எல்லாம் வச்சிருக்காங்களாம். சீக்கிரமாக வாங்கி எங்களுக்கு படிச்சி காட்டுங்கன்னு சொன்னாங்க, ஆமாம் இங்கே வந்து பார்த்தால், உண்மை தான்.

அருமையான பதிவு நண்பரே!

நான் காமிக்ஸ் வெறியன் என்றே சொல்லலாம், ஒரே காமிக்ஸை ஆயிரம் தடவை கூட படிச்சிருப்பேன், சாப்பிடும் போது கட்டாயம் புத்தகம் (கதை) தேவை, அதிலும் காமிக்ஸ் என்றால் வெறும் சோறே போதும். சில சமயம் படிக்க புது புத்தகம் இல்லை என்றால் என்னிடம் இருந்த நூற்றுக்கணக்கான புத்தகத்தில் கண்ணை மூடிக் கொண்டு ஒன்றை எடுப்பேன், பின்னர் அதை கண்ணை மூடிக்கொண்டு பிரிப்பேன், எங்கே இருக்குதோ, அங்கிருந்து படிப்பேன்.

வாவ், உண்மையில் அந்த காலம் வாழ்க்கையின் உன்னதமான உற்சாகமான காலம், உம் மீண்டும் கிடைக்குமா?

இந்த முறை ஊருக்கு போகும் போது பழைய பத்திரிக்கை விற்பவர்களிடம் சொல்லி, காமிக்ஸ் புத்தகம் கிடைத்தால் எடுத்து வைக்க சொல்லணும்.

இணையத்தில் கூட இலவசமாக இந்திரஜால் காமிக்ஸ் கிடைக்குதுன்னு வலைப்பதிவில் படித்திருக்கிறேன். மக்களே! லிங்க் கொடுங்க.

தலைவா! உங்க குதிரை எங்கே? ஆனாலும் உங்க குதிரையின் குசும்பே தனி தான், நம்ம குதிரை அமைதியான குதிரை.

3:19 PM  
மனதின் ஓசை said...

ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ் தாங்க முதல்ல படிச்சது...மாயாவி, லேடி மாடஸ்டி, அப்புரம் யாருங்க அது, ஒரு "செவ்விந்தியன்" எல்லாம் வருவாங்களே? எல்லா பேரும் மறந்து போசு.. எடுத்து விடுங்க... அதுல ஆரம்பிச்சதுதான் இந்த படிக்கிற பழக்கம்...அப்போல்லாம் மொதல்ல படிக்கிறதுக்கு வீட்டில அடிதடியே நடக்கும்.."உயிரைத் தேடி" , "பலமுக மன்னன் ஜோ" - இதெல்லாம் ஞாபகம் இருக்குங்களா?..

3:29 PM  
முத்து ( தமிழினி) said...

லக்கி,

என்ன ஆச்சரியம்? உங்க காமிக்ஸ் மகாத்மியத்தை படிச்சிட்டு அந்த காலத்துக்கே போய் சஞ்சாரிச்சுட்டி இருந்தா உங்க பின்னூட்டம் வருது கூகிளில்...

எனக்கு பிடிச்ச ஆட்கள் ஆர்ச்சி,ஸ்பைடர்மென்
(முன்வழுக்கையோட வலைதுப்பாக்கியொடு அவர் ஸ்டைலே தனி)

இன்னும் நிறைய கதை இருக்கு.இப்ப படிக்கிறதில்லை.

3:30 PM  
செந்தழல் ரவி said...

ஆமாம்...லயன் காமிக்ஸ் முகவரி வேலை செய்வதாக தெரியவில்லை...

அவர் தொலைபேசி எண் கொடுங்க..

4:27 PM  
luckylook said...

லயன் மற்றும் முத்து காமிக்ஸ் முகவரி :

M/S Prakash Publishers,
PO Box No:374,
8/D-5 Chairman PKSAA Road,
Ammankovilpatti,
Sivakasi 626189.
Ph : 91 4562 272649
Fax: 91 4562 275159
E-Mail:lion@vsnl.com

5:20 PM  
இளவஞ்சி said...

லக்கிலுக்,

லக்கிதான் என் ஆதர்சனம்!

லக்கிபோக மிகவும் ரசித்தது ரத்தப்படலம் சீரிஸ்... எத்தனை பாகம் வந்ததென்று நினைவில்லை! ஒவ்வொரு படமும் வித்தியாசமான கோணத்தில் வரையப்பட்டிருக்கும்! :)

9:55 PM  
நாகை சிவா said...

நான் பள்ளியில் படித்த காலத்தில் காமிஸ் வெறியன்.நீங்க சொன்ன மாதிரி லயன் காமிஸ் ஸ்பெஷல் வாங்குவதற்கு அலைந்த காலம் அது. சரிவர புத்தகம் கிடைப்பதில் வெறுத்து போயி காமிஸ் படிப்பதே இல்லை.
இந்தியா வந்தவுடன் உங்க கேங்கில் சேர்ந்து விட வேண்டியது தான். மடிப்பாக்கம் தானே..........

2:48 PM  
FloraiPuyal said...

//

நான் காமிக்ஸ் வெறியன் என்றே சொல்லலாம், ஒரே காமிக்ஸை ஆயிரம் தடவை கூட படிச்சிருப்பேன், சாப்பிடும் போது கட்டாயம் புத்தகம் (கதை) தேவை, அதிலும் காமிக்ஸ் என்றால் வெறும் சோறே போதும். சில சமயம் படிக்க புது புத்தகம் இல்லை என்றால் என்னிடம் இருந்த நூற்றுக்கணக்கான புத்தகத்தில் கண்ணை மூடிக் கொண்டு ஒன்றை எடுப்பேன், பின்னர் அதை கண்ணை மூடிக்கொண்டு பிரிப்பேன், எங்கே இருக்குதோ, அங்கிருந்து படிப்பேன்.

//

அப்படியே எனக்கும் பொருந்துகிறது. உங்கள் குழுவில் என்னைனயும் சேர்ப்பீராக.

7:44 AM  
Muse said...

தலைவரே,

மதுரை பக்கம் போனல் மறக்காமல் செய்வது லயன் காமிக்ஸ் வாங்குவதுதான். நான் இன்னும் காமிக்ஸ் பைத்தியம்தான். அதிலும் தமிழ் காமிக்ஸ்.

>>>> நான் கிட்டத்தட்ட 85 சதம் லயன் காமிக்ஸ் வைத்திருக்கிறேன்....<<<<

உங்கள் வீட்டு அட்ரெஸ் சொல்லுங்க. எல்லா புத்தகங்களையும் திருட முகமூடி போட்டுக்கொண்டு வரப்போகிறேன்.


>>>> யாராவது ஏ௯-காமிக்ஸ் ரசிகர்கள் இருந்தால் சொல்லுங்கள்.... மீண்டும் நீங்கள் காமிக்ஸ் படிக்க நான் உதவுகிறேன் <<<<

ப்ளீஸ். இங்கே. இங்கே. நான் காத்துக்கொண்டிருக்கிறேன்.

4:01 PM  

Enter supporting content here